பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி யாகம்

பிளாஞ்சேரி பைரவர் கோவிலில் நடந்த தேய்பிறை அஷ்டமி யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-09-07 20:49 GMT

திருவிடைமருதூர்:

கும்பகோணம் அருகே உள்ள பிளாஞ்சேரியில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு அஷ்ட பைரவர்கள் தனி, தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து அஷ்டபைரவர்களுக்கு மஞ்சள் திரவியம் பால் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கட அபிஷேகம் செய்து அஷ்ட பைரவர்களுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு வடை மாலை சாத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் கண்ணன் சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர். அஷ்டமியாக சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அஷ்ட பைரவர்களை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் சரபசூழினி உபாசகர் எஸ். நாகராஜ சிவாச்சாரியார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்