காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு

காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு

Update: 2023-05-13 18:45 GMT

திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலபைரவருக்கு வடைமாலை அணிவிக்கப்பட்டது. அப்போது சிவபெருமானுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்