காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை
மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் கோவிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜைகள் நடந்தது. கணபதி பூஜையுடன், ஹோமங்கள் நடந்து பூர்ணாஹூதி முடித்து பூஜிக்கப்பட்ட கடங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் பைரவருக்கு அபிஷேக ஆராதனைகளுடன் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.