மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்கள்

சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்களை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை அடிப்படையாக கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-01-21 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் அய்யப்பன். இவர் ராஜபாளையம் சாலையில் உள்ள காங்கிரஸ் பொன்விழா மைதானம் அருகில் கடை வைத்து பழைய மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கடை முன்பு வாகனங்களை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, ஒரு மோட்டார் சைக்கிள் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் சங்கரன்கோவில் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி, வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்