போலீசுக்கு தெரியாமல் வாலிபர் உடல் எரிப்பு - பாதி எரிந்த நிலையில் மீட்பு
போலீசுக்கு தெரியாமல் வாலிபர் உடலை எரித்ததால் பாதி எரிந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது
பேரையூர்
மதுரை பேரையூர் அருகே உள்ள கொண்டு ரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்குமார் (வயது 31). நேற்று முன்தினம் இரவு இவர் தனது வீட்டில் இறந்து கிடந்தார். ஊரில் திருவிழா நடந்து வருவதால் கார்த்திக் குமாரின் உடலை போலீசாருக்கு தெரியாமல் அங்குள்ள சுடுகாட்டில் எரித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த பேரையூர் போலீசார் விரைந்து சென்று சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த உடலை அணைத்து பாதி எரிந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.