மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்கள் கைது

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்

Update: 2023-06-25 17:25 GMT

ஆற்காடு

ஆற்காடு டவுன் போலீசார் ஆற்காட்டில் உள்ள செய்யாறு புறவழிச் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தனித்தனியாக வந்த வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை நடத்தியதில், வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு பகுதியை சேர்ந்த விமல்குமார் (வயது 23),காட்பாடியை அடுத்த முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் என்பதும், மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்