சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிராஜ் யுதின் உபத். இவர், நேற்று மதியம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அசோக் ஸ்தூபி பகுதிக்கு வந்தார். பின்னர் அவர் கையில் தேசிய கொடியை ஏந்திக்கொண்டு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் சிராஜ் யுதின் உபத்தை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு போலீசாருடன் அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.