வாலிபருக்கு கத்திக்குத்து; ஒருவர் கைது
வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி துவாக்குடி கருமாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் அருண்பாண்டியன் (வயது 26). தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (26). இவர்கள் 2 பேரும் திருச்சி ஜங்ஷன் பகுதியில் பழைய பேப்பர், பாட்டில்களை எடுத்து விற்கும் தொழில் செய்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அருண்பாண்டியனுக்கும், மாரிமுத்துவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அருண்பாண்டியை சரமாரியாக குத்திவிட்டு மாரிமுத்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் வழகு்குப்பதிவு செய்து, மாரிமுத்துவை கைது செய்தனர். படுகாயம் அடைந்த அருண்பாண்டியன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.