கரடி தாக்கி வாலிபர் படுகாயம்

கரடி தாக்கி வாலிபர் படுகாயம்

Update: 2023-07-22 20:30 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அருகே அரக்கோடு மல்லிக்கொப்பை கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 34). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் பிரபு நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு அதே கிராமத்தில் உள்ள சகோதரர் ராஜமாணிக்கம் என்பவரது வீட்டிற்கு தனது தோட்டத்தின் வழியாக நடந்து சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக புதர் மறைவில் இருந்து திடீரென வெளியே வந்த கரடி ஒன்று பிரபுவை துரத்தி தாக்கியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீப்பந்தங்களை காட்டி கரடியை விரட்டினர். தொடர்ந்து பிரபுவை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை அறிந்த வனத்துறையினர் பிரபுவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், வனவிலங்கு தாக்குதலால் காயமடைந்தவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரண தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்