வாகனம் மோதி வாலிபர் பலி

வாகனம் மோதி வாலிபர் பலியானார்.

Update: 2023-04-24 18:39 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் எறையூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முஸ்தபா மகன் அக்பர்அலி(வயது 20). இவர் எறையூர் சர்க்கரை ஆலையில் தற்காலிகமாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் வரை சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மங்களமேடு அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், அக்பர் அலியின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த அக்பர்அலி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்பர் அலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அக்பர் அலி மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்