வாத்தலை அருகே உள்ள நம்பர் 2 கரியமாணிக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சந்துரு (வயது 21). டிரைவரான இவர் நேற்று இரவு சொந்த வேலை காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் குணசீலத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். நாமக்கல் - திருச்சி சாலையில் வாத்தலை அருகே புதுப்பாலம் அருகே வந்தபோது வாகனம் ஒன்று சந்துரு ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சத்துரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.