வாகனம் மோதி வாலிபர் பலி

வாகனம் மோதி வாலிபர் பலியானார்.

Update: 2023-02-22 08:49 GMT

செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் அடுத்த அண்டவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராகுல் (27). பட்டதாரியான இவருக்கு கடந்த 6மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

வழக்கம் போல நேற்று மாலை பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.

செங்கல்பட்டு அருகே புலிப்பாக்கம் பகுதியில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் ராகுலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்