விழுப்புரம்
விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை அலமேலுபுரம் ஜெயலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் பரத்(வயது 22). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு சொந்தமாக சரக்கு வாகனம் ஒன்றை வாங்கி அதனை வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் வெளியே சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றார். இவர் விழுப்புரம் வண்டிமேடு ரெயில்வே கேட் அருகில் தண்டவாளத்தை கடந்து செல்லும்போது விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த பரத், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.