டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி
கல்லங்குறிச்சி அருகே டிப்பர் லாரி மோதி வாலிபர் பலியானார்.
அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர்கள் சிவா மற்றும் அஜித்குமார். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு கயர்லாபாத் ஆஞ்சநேயர் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரேவந்த டிப்பர் லாரி மோதியதில் 2 வாலிபர்களும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 2 பேரையும் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சிவா தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிவா நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.