அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் பலி
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் பலி
வல்லம்
தஞ்சை அருகே தாளம்பட்டி கீழத்தெருவை சேர்ந்த ரங்கசாமி மகன் சதீஷ்குமார் (வயது21), அவரது நண்பரான தாளம்பட்டி கீழத்தெருவை சேர்ந்த சின்னையன் மகன் சிவராஜ் (16) ஆகியோர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமி கும்பிடுவதற்காக நேற்று பாதயாத்திரை சென்று கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக 2 பேர் மீது மோதியது. இதில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் படுகாயம் அடைந்த சிவராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தகவல் அறிந்ததும் வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சதீஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.