சாயல்குடி
சாயல்குடி அருகே ஒப்பிலான் கிராமத்தை சேர்ந்தவர் சம்சு முகைதீன் (வயது 32). இவர் 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். அவரது நண்பர் நரிப்பையூர் கிராமத்தைச் சேர்ந்த ஜலில் ரகுமான் அழைத்ததின் பேரில் நரிப்பையூர் சென்றுள்ளார். இவர்கள் இருவரும் நரிப்பையூர் கிராமத்திலிருந்து கடற்கரை சாலை ஓரமாக காரை நிறுத்திவிட்டு இருவரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது நரிப்பையூர் கிராமத்தை சேர்ந்த முகம்மது மெசல்(22) என்பவர் காரில் வந்தார். இந்த கார் சம்சுமுகைதீன் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்தார். அவரை கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து இறந்த சம்சு முகைதீன் மனைவி வகிதா பானு கொடுத்த புகாரின் பேரில் சாயல்குடி இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) முருகதாசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.