சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள உப்புபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன்கள் கார்த்திகேயன் (வயது 21), ரமேஷ்குமார் (19). இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சிவகாசி-விளம்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரமேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த வேண்டுராயபுரத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.