விபத்தில் வாலிபர் படுகாயம்

கயத்தாறு அருகே நடந்த விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-11-25 18:45 GMT

கயத்தாறு:

கழுமலை அருகே பழங்கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் சங்கரநாராயணன் மகன் ரகுராம் (வயது‌ 33). இவர் கழுமலையில் இருந்து கயத்தாறுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது நெல்லை ஏ.ஆர்.லயனை சேர்ந்த முருகன் மகன் ரவி என்பவர் ஓட்டிவந்த கார் எதிர் பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்