மோட்டார் சைக்கிள்கள் மோதலில் வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதலில் வாலிபர் பலியானார்.

Update: 2023-07-03 18:09 GMT

கலசபாக்கத்தை அடுத்த காப்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது 28). இவர் நேற்று முன்தினம் இரவு காப்பலூர் கிராமத்தில் இருந்து கலசபாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.காப்பலூர் ரோட்டில் உள்ள முந்திரி தொழிற்சாலை அருகே வந்தபோது எதிரில் அதிவேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.

இதில் நிலை தடுமாறிய நல்லதம்பி கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்