மதுரை வலையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணபாண்டி (வயது 35). சம்பவத்தன்று இவர், மதுரை- அருப்புக்கோட்டை சாலை மண்டேலா நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, சரவணபாண்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், லாரி டிரைவர் சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.