லாரி மோதி வாலிபர் சாவு

லாரி மோதி வாலிபர் இறந்தார்.

Update: 2023-08-24 18:45 GMT

முதுகுளத்தூர், 

முதுகுளத்தூர் அருகே உள்ள பூமாவிலங்கை கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி (வயது 32). இவர் குடும்பத்துடன் கமுதி கோட்டைமேட்டு பகுதியில் வசித்து வந்தார். சம்பவத்தன்று முனியசாமி தனது மோட்டார் சைக்கிளில் பேரையூரிலிருந்து கமுதி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் விவசாய கல்லூரி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி முனியசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முனியசாமி தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்