லாரி மோதி வாலிபர் சாவு

வேப்பூரில் லாரி மோதி வாலிபர் சாவு

Update: 2023-07-23 18:45 GMT

ராமநத்தம்

வேப்பூர் அருகே உள்ள தொண்டங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் புருஷோத்தமன்(வயது 33). இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். வேப்பூர் மேம்பாலத்தில் வந்தபோது திருச்சியில் இருந்து சென்னைக்கு டயர் ஏற்றிச்சென்ற லாரி புருஷோத்தமன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவா் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்