மின்சாரம் பாய்ந்து வாலிபர் சாவு

மாத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் இறந்தார்.

Update: 2022-09-08 17:42 GMT

ஆவூர்:

வாலிபர் பலி

விராலிமலை ஒன்றியம், லெட்சுமணன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பண்டிதர்குடிவயல் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 65). இவரது மகன் பிரபு (28). திருமணம் ஆகவில்லை. விவசாயம் செய்து வரும் பிரபு நேற்று மாலை வீட்டிலிருந்து குளிக்க செல்வதாக கூறிவிட்டு அவர்களது தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

இரவு வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் இரவு 8.30 மணியளவில் தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு பிரபு மின் மோட்டார் சுவிட்சில் கை வைத்தவாறு மின்சாரம் பாய்ந்து இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் இதுகுறித்து மாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விசாரணை

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி மின்விபத்து குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்