போதை ஊசி செலுத்திக்கொண்ட வாலிபர் சாவு; 2 பேர் கைது

திருச்சியில் போதை ஊசி செலுத்திக்கொண்ட வாலிபர் இறந்தார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-10-03 19:57 GMT

திருச்சி பழைய கரூர் ரோடு மேலசிந்தாமணியை சேர்ந்தவர் ஜாவித் (வயது 24). இவர் மற்றும் அவரது நண்பர்கள் தென்னூர் உழவர் சந்தை அருகே சம்பவத்தன்று இரவு போதை மாத்திரை வாங்கி தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தினர். இதில் ஜாவித் மயங்கி விழுந்தார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க் கப்பட்ட அவர் இறந்தார். இந்த சம்பவம் குறித்து தில்லை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஜாவித்தின் நண்பர்களான ஆசிக் பாட்ஷா (21), திருச்சி உப்பு பாறை பகுதியை சேர்ந்த அன்சாரி, உலகநாதன், பிரசன்னா ஆகியோர் தென்னூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ராம்நாத் என்பரிடம் போதை மாத்திரையை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்தநிலையில் ராம்நாத் மற்றும் ஆசிக் பாட்ஷா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 18 போதை மாத்திரைகள், ஒரு போதை மருந்து பாட்டில், ஒரு ஊசி மற்றும் 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அன்சாரி, பிரசன்னா, உலகநாதன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்