கடல் அலையில் சிக்கி வாலிபர் சாவு
சாயல்குடி அருகே கடல் அலையில் சிக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
சாயல்குடி,
சாயல்குடி அருகே மாரியூர் கடலில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாளையம்பட்டி கிராமத்தை சேர்ந்த சந்திர செல்வம் மகன் சந்தோஷ் (வயது23) அவரது நண்பர்கள் முத்து முருகன், அஜித்குமார், அருண்குமார், அங்கேஸ்வரன், அருண்குமார் சங்கர் பிரகாஷ், மணிகண்டன், ஆகியோர் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது கடல் அலையில் சந்ேதாஷ் சிக்கினார். உடனே அவரது நண்பர்கள் கடலில் மூழ்கிய சந்தோஷை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே சந்தோஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இது குறித்து வாலிநோக்கம் கடற்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.