மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் இறந்தார்.

Update: 2023-04-11 18:39 GMT

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் பிரகதீஷ் (வயது 29). இவர், புதுக்கோட்டை மாவட்டம், ஆலவயலில் உள்ள உறவினர் வீட்டிற்கு திருவிழாவிற்கு வந்திருந்தார். பின்னர் அவர் மோட்டார் சைக்கிளில் அவரது சித்தி கோமதி மற்றும் கோமதி மகன் கஜேந்திரன் ஆகியோருடன் சடையம்பட்டி-ஒலியமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தார். சுந்தம்பட்டி விளக்கு அருகே வந்த போது, மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையோரம் உள்ள மைல்கல்லில் மோதியது. இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். இதைபார்த்த அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் மேல்சிகிச்சைக்காக பிரகதீஷ் மட்டும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பிரகதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்