மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார்.

Update: 2023-02-24 18:52 GMT

சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ஆனந்தகுமார் (வயது 26). பி.பி.ஏ. படித்து விட்டு நிதிநிறுவனம் நடத்தி வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று சைதாப்பேட்டையில் இருந்து கோவைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை நிமித்தாக சென்று கொண்டிருந்தார். அந்த மோட்டார் சைக்கிள் கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தண்ணீர்பள்ளி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, உடல் சோர்வால் ஆனந்தகுமார் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ஆனந்தகுமார் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து ஆனந்தகுமாரின் தாய்மாமா கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்