மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் இறந்தார்.

Update: 2023-08-22 20:05 GMT

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது28). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் அகரப்பேட்டை அய்யனார் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி எச்சரிக்கை போர்டில் மோதி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து விவேகானந்தனின் மனைவி ரம்யா (27) தோகூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தோகூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் யோகராஜ் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்