மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-07-19 18:30 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராம்கோ நகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் ரவி (வயது 27). இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிமெண்டு நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி செல்வ லட்சுமி பிரியா. இவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். கடந்த 10-ந் தேதி ராஜபாளையத்தில் உள்ள தனது தாயாரை பார்த்துவிட்டு ரவி தனது மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.

பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் பெந்தகொஸ்தே சர்ச் பிரிவு ரோடு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து ரவி கீழே தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்