ஏரியில் மூழ்கி வாலிபர் பலி

ஏரியில் மூழ்கி வாலிபர் பலியானார்.

Update: 2022-10-05 21:14 GMT

எடப்பாடி:

எடப்பாடி அருகே வேம்பனேரி காலனி பகுதியை சேர்ந்த சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 35), திருமணமாகாத இவர், அங்குள்ள ஏரியில் குளிக்க சென்றார். குளித்து கொண்டிருந்த போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றார். அங்கு தண்ணீரில் மூழ்கினார். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் தங்கராஜை தேடினர். நீண்ட நேரம் தேடும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் ேதடி தங்கராஜ் உடலை மீட்டனர். இதுகுறித்து எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்