கல்குவாரி குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு

கல்குவாரி குளத்தில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.

Update: 2023-06-07 17:59 GMT

திருச்சி புத்தூர் நால்ரோட்டை சேர்ந்த பழனிவேலுவின் மகன் சிவனேஸ்வரன்(வயது 19). இவர் வெல்டர் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள கல் குவாரி குளத்திற்கு கடந்த 5-ந் தேதி மாலை சென்றபோது, அங்கு குளத்தில் தவறி விழுந்து சிவனேஸ்வரன் மூழ்கினார். இதற்கிடையில் அவரை காணவில்லை என உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் அந்த குளத்தில் நேற்று முன்தினம் சிவனேஸ்வரன் பிணமாக மிதந்தார். தீயணைப்பு துறையினர் மூலம் அவரது உடல் மீட்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்