கல்குவாரி குட்டையில் மூழ்கி வாலிபர் சாவு
கன்னங்குறிச்சி அருகே கல்குவாரி குட்ைடயில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
கன்னங்குறிச்சி:-
கன்னங்குறிச்சி அருகே கல்குவாரி குட்ைடயில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தறி தொழிலாளி
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை நல்லறம் பட்டியலைச் சேர்ந்தவர் அசோக் (வயது 20). தறி தொழிலாளி. இவர் நேற்று தன்னுடைய நண்பர்களுடன் கோரிமேட்டை அடுத்த ஜீவா நகரில் உள்ள கல்குவாரி அருகே மது அருந்திவிட்டு அங்குள்ள குட்டையில் குளித்ததாக தெரிகிறது.
அப்போது அசோக் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு தண்ணீரில் அசோக் மூழ்கியுள்ளார். அவருடைய நண்பர்கள் அவரை மீட்க முடியாமல் தவித்தனர்.
உடல் மீட்பு
தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார், செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் அசோக் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
அசோக் உடலை மீட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள் உடலை பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.