காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

மேட்டூருக்கு விநாயகா் சிலையை கரைத்த வாலிபர் காவிரி ஆற்றில் மூழ்கி பலியானார்.

Update: 2022-09-04 19:42 GMT

மேட்டூருக்கு விநாயகா் சிலையை கரைத்த வாலிபர் காவிரி ஆற்றில் மூழ்கி பலியானார்.

விநாயகர் சிலை கரைப்பு

சேலம் களரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50), வெல்டிங் தொழிலாளி. இவருடைய மகன் பிருத்திவ் ராஜ் (28). திருமணம் ஆகவில்லை. இவர் திருச்சி மெயின் ரோட்டில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார்.

விநாயகர் சதுர்த்தி அன்று இவர்கள் வீட்டு தெரு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை காவிரி ஆற்றில் கரைப்பதற்காக நேற்று மேட்டூருக்கு சரக்கு ஆட்டோவில் கொண்டு சென்றனர். மேட்டூர் அடுத்த திப்பம்பட்டி பகுதியில் உள்ள காவிரி ஆற்றுக்கு சென்று விநாயகர் சிலையைகரைத்தனர்.

அப்போது பிருத்திவ் ராஜ் காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் எதிர்பாராதவிதமாக மூழ்கினார். மீண்டும் அவர் மேலே வரவில்லை. உடனே அவருடன் வந்த நண்பர்கள ஆற்றுக்குள் குதித்து அவரை மயங்கிய நிலையில் மீட்டு கரைக்கு எடுத்து வந்தனர்.

பலி

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பிருத்திவ் ராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணி கருமலைக்கடல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்