மின்சார ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

மின்சார ரெயிலில் அடிபட்டு வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Update: 2023-02-05 05:22 GMT

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற 25 வயது மதிக்கத்தக்க வாலிபர், ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக எழும்பூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் தேனி மாவட்டம் ஆசாரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் துரைப்பாண்டி (வயது 25) என்பது தெரியவந்தது. இதே போல நேற்று முன்தினம் பூங்கா ரெயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அனுமன் (32) என்ற வட மாநில வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது தாம்பரத்திலிருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்