வாகனம் மோதி வாலிபர் சாவு

வாகனம் மோதி வாலிபர் பலியானார்.

Update: 2022-12-31 18:24 GMT

திருமயத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே இன்று அதிகாலை வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இறந்தவர் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் திருக்கலாக்குடி கிராமத்தை சேர்ந்த குப்பன் மகன் செல்வமணி (வயது 26) என்பது தெரியவந்தது. மேலும் செல்வமணி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் இறந்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்