டிராக்டர் மோதி வாலிபர் சாவு

டிராக்டர் மோதி வாலிபர் உயிரிழந்தாா்.

Update: 2022-10-08 18:45 GMT


செஞ்சி, 

திருவண்ணாமலை மாவட்டம் காட்டுவேலந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் மணிகண்டன் (வயது 35). இவர் நேற்று மாலை சென்னையில் இருந்து, மோட்டார் சைக்கிளில் தனது சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவர் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரே வந்தபோது திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்தது. இதனால், மோட்டார் சைக்கிளை அவர் திருப்ப முயன்றுள்ளார். அந்த சமயத்தில் எதிரே வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்