அரசு பஸ் மோதி வாலிபர் பலி

செய்யாறு அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-05-15 12:24 GMT

செய்யாறு

செய்யாறு அருகே விண்ணவாடி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50), இவரது மகன் விஜய் ஆனந்த் (23). இவர் செய்யாறில் உள்ள மருந்து கடையில் வேலை செய்து வந்தார்.

நேற்று  இரவு வேலை முடித்துவிட்டு விஜய் ஆனந்த் மோட்டார்சைக்கிளில் விண்ணவாடிக்கு சென்று கொண்டிருந்தார். அதேபோல் காழியூரை சேர்ந்த தாவத், தனது மனைவி அருணா, மகன் விஷ்ணுபிரசாத் ஆகியோருடன் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

செய்யாறு அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் 2 மோட்டார்சைக்கிள்கள் மீது மோதியது.

இதில் விஜய் ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தாவத் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அருணா, விஷ்ணுபிரசாத் ஆகியோர் லேசான காயம் அடைந்தனர்.

இதுகுறித்து ரமேஷ் செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்