கார் மோதி வாலிபர் சாவு

கார் மோதி வாலிபர் உயிரிழந்தார்.

Update: 2022-08-16 19:03 GMT

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் பொட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்த கணேசனின் மகன் ஆனந்தகுமார்(வயது 32). இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர் விஸ்வநாதன் வீட்டிற்கு சென்றபோது, அந்த வழியாக வந்த கார் மோதியதில் ஆனந்தகுமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து ஆனந்தகுமாரின் மனைவி மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்