தனியார் விடுதியில் வாலிபர் தற்கொலை

தனியார் விடுதியில் வாலிபர் தற்கொலை

Update: 2023-07-22 21:34 GMT

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே வடக்கு குண்டல் பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 23) என்பவர் அறை எடுத்து தங்கியுள்ளார்.

நேற்று காலை 10 மணியாகியும் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் அறையின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்கவில்லை. பின்னர் அறையின் கதவை உடைத்து சென்று பார்த்த போது விஜயகுமார் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

உடனே அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இதுகுறித்து கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றிய விஜயகுமார் விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்தது அம்பலமானது. இவருடைய தந்தை பெயர் மணிகண்டன். விஜயகுமாரின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்