வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வாடிப்பட்டி அருகே செலவுக்கு தந்தை பணம் கொடுக்க மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-05 20:58 GMT

வாடிப்பட்டி, 

வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி மேட்டுபெருமாள்நகரில் வசித்து வருபவர் கிருஷ்ணன் (வயது 55). இவரது மனைவி கல்பனாதேவி. இவர்களது மகன் மணிபாரதி (23).

கடந்த 10 நாட்களாக தந்தை கிருஷ்ணனிடம் செலவுக்கு பணம் கேட்டும் தரவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டி பணம் பெற்றுவந்தார். அதேபோல் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் வழக்கம் போல் மணிபாரதி செலவுக்கு பணம் கேட்க கிருஷ்ணன் பணம் இல்லை என்று கூறியுள்ளார். உடனே மணிபாரதி கோபித்துக்கொண்டு வீட்டில் உள்ள உள்அறையில் சென்று கதவை தாழ்பாள் போட்டுள்ளார். கிருஷ்ணன் பின்புறம் உள்ள ஜன்னலில் சென்று பார்த்தபோது மணிபாரதி அந்த அறையில் உள்ள மின்விசிறியில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே கதவை உடைத்து உள்ளே சென்று மணிபாரதியை கீழே இறக்கி வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் உதயக்குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்