வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-19 08:36 GMT

செவ்வாப்பேட்டை அடுத்த பெருமாள்பட்டு டி.எஸ்.என் நகரில் வசித்து வந்தவர் இளையபாரதி (வயது 28) பி.எஸ்.சி பட்டதாரியான இவர் சென்னை பெருங்குடியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கவிதா (வயது 24) எம்.சி.ஏ படித்துள்ள இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. 2 வயதில் கயல்யா என்ற மகள் உள்ளார்.

கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விடுவதால் குழந்தையை வேப்பம்பட்டு பகுதியில் வசிக்கும் கவிதாவின் பெற்றோர் வீட்டில் பராமரித்து வந்தனர்.

வேலையில் இருந்து வந்த பிறகு மாலையில் குழந்தையை பார்த்துவிட்டு வீட்டுக்கு சென்று விடுவார்கள். அதே போல் காலையில் குழந்தையை பார்த்துவிட்டு வேலைக்கு செல்வது வழக்கமாக இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு கணவன், மனைவி இருவரும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தனர். பின்னர் இரவு 9.45 மணிக்கு கவிதா இளையபாரதிக்கு தோசை போட்டு கொடுத்தார். தோசை சாப்பிட்ட பின்னர் எனக்கு மனசு சரியில்லை ஒரு மாதிரியாக இருக்கிறது நான் போய் படுத்து கொள்கிறேன் என்று கூறிவிட்டு இளையபாரதி படுக்கையறைக்கு சென்று விட்டார். கவிதாவும் வேலை இருப்பதாக கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருந்தார்.

இரவு 11.45 மணிக்கு இளையபாரதியின் அறைக்கு கவிதா சென்றபோது அவர் தொட்டில் கயிற்றில் முட்டி போட்டவாறு தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து கவிதா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இளையபாரதி உடலை கீழே இறக்கி வைத்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வந்த பிறகு இளையபாரதியை மீட்டு திருவள்ளூர் அரசுஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்து விட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து இளையபாரதி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்