வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-18 17:16 GMT

வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தை சேர்ந்தவர் சந்துரு (வயது 29). இவர் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடையில் வேலை பார்த்து வந்தார். சந்துரு மது அருந்தி விட்டு வீட்டிற்கு செல்வதாகவும், அதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் குடித்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். மேலும் ஒழுங்காக வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

இதையடுத்து தனது அறைக்கு சென்ற சந்துரு வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. குடும்பத்தினர் அந்த அறைக்கு சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கினார். அதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்