வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-09 06:56 GMT

காஞ்சீபுரம்,

சின்ன காஞ்சீபுரம் வேகவதி நதி ரோடு சுல்தான் நகரை சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான் (வயது 32). மது குடிக்கும் பழக்கம் உடையவர். இவரது மனைவி அனிஷ்பர்வீன் (25), இவர் சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு நகை கடையில் வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் அப்துல் ரஹ்மான், மனைவிக்கு தெரியாமல் அவரது நகைகளை அடமானம் வைத்து மது குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் அப்துல் ரஹ்மான் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து அவரது மனைவி சின்ன காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முரளி கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து அப்துல் ரஹ்மான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்