வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கறம்பக்குடி எஸ்.கபளம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 20). இவர் புதுக்கோட்டையில் அய்யனார்புரம் பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முருகானந்தம் தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன? என விசாரிக்கின்றனர்.