வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

கடன் சுமையால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-10-17 18:45 GMT

மஞ்சூர், 

மஞ்சூர் அடுத்த குந்தா பிக்கட்டி சிவசக்தி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). திருமணமாகாதவர். இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சொந்தமாக வாடகைக்கு வாகனங்களை இயக்கி வந்தார். இந்தநிலையில் கொரோனாவுக்கு பின்னர் வாடகை வாகனங்களை இயக்குவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால், அவருக்கு கடன் சுமை அதிகமானது.

இதனால் விரக்தி அடைந்த மணிகண்டன் கடந்த 11-ந் தேதி விஷம் குடித்து குந்தா பாலம் அருகில் மயங்கி கிடந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இறந்தார். இதுகுறித்து எமரால்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்