விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
கள்ளக்குறிச்சி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
கண்டாச்சிமங்கலம்
கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் வெங்கடேசன்(வயது 23). கணினி பட்டய படிப்பு படித்துள்ள இவரை அவரது தந்தை வேலைக்கு செல்லாமல் ஏன் வீட்டில் இருக்கிறாய் என கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த வெங்கடேசன் விஷம்குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.