விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

சாயல்குடி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-10 18:41 GMT

சாயல்குடி,

சாயல்குடி அருகே மாரியூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் சாத்தையா (வயது 22) டிராக்டர் டிரைவர். இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். சாத்தையாவை அவரது தாயார் வேலைக்கு செல்லுமாறு கூறினார். இதில் விரக்தி அடைந்த சாத்தையா மதுவில் விஷம் கலந்து குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சாத்தையா உயிர் இழந்தார். இது குறித்து சாயல்குடி சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்