விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-17 18:46 GMT

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23). இவரது தாய் பத்மாவதி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தற்போது அவரது தாத்தாவான கலியபெருமாள் வீட்டில் தங்கி, மணிகண்டன் பொள்ளாச்சிக்கு அடிக்கடி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்று விட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூர் வந்த அவர் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். பின்னர் நேற்று முன்தினம் ஏரிக்கரை அருகே பூச்சி மருந்தை குடித்துவிட்டு(விஷம்) அவரது தாத்தாவிற்கு போன் செய்து கூறியுள்ளார். இதனையடுத்து உடனடியாக அவரது குடும்பத்தினர் அங்கு சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்