'எலி பேஸ்ட்' சாப்பிட்டு வாலிபர் தற்கொலை

‘எலி பேஸ்ட்’ சாப்பிட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-10-20 13:06 GMT

நாட்டறம்பள்ளி அண்ணா தெரு பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரின் மகன் ராகுல் (வயது 24). இவர் பட்டப்படிப்பு முடித்து விட்டு ஓசூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர், 14-ந்தேதி விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு திரும்பினார்.

அப்போது பெற்றோர் ராகுலிடம் வாங்கிய சம்பள பணத்திற்கு கணக்கு கேட்டனர். இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த ராகுல் கடந்த 14-ந் தேதி எலி பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அவரை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு ராகுல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து தந்தை லோகநாதன் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்