கஞ்சா பாக்கெட்டுகளுடன் வாலிபர் கைது

ராமநாதபுரத்தில் கஞ்சா பாக்கெட்டுகளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-22 18:45 GMT

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீசார் அல்லிக்கண்மாய் சுடுகாடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டபோது 23 பாக்கெட்டுகளில் தலா 3 கிராம் எடையுள்ள 70 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக ராமநாதபுரம் வண்டிக்காரத்தெருவை சேர்ந்த முத்து மகன் நவீன்குமார் (வயது 19) என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்